ரஷ்யாவுடன் பிரித்தானியா போரில் உள்ளது…ஆனால் மக்களுக்கு தெரியாது: ராணுவ தலைவர் வெளிப்படை


ரஷ்யாவுடன் பிரித்தானியாவும் போரில் ஈடுபட்டு வருவதாக அந்த நாட்டின் முன்னாள் ராணுவ தலைவர் தெரிவித்துள்ளார்.
 

உக்ரைனுக்கான ஆதரவு

உக்ரைன் மீது ரஷ்யா தனது போர் நடவடிக்கைகளை தொடங்கிய பிறகு பிரித்தானியா மற்றும் பிற நேட்டோ உறுப்பினர்கள் உக்ரைனில் நேரடியாக போரில் ஈடுபட மறுத்துவிட்டனர், ஏனென்றால் மேற்கு நாடுகள் அவர்கள் ரஷ்யாவுடன் முழுநீள போரை தவிர்க்க விரும்புவதாக தெரிவித்தார்கள்.

இருப்பினும் பிரித்தானியா அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகள் பல உக்ரைனுக்கு இராணுவ ஆதரவையும் நிதி உதவியையும் வழங்கியுள்ளனர், மேலும் மாஸ்கோ மீது பல அடுக்கு பொருளாதாரத் தடைகளை விதித்தனர்.

ரஷ்யாவுடன் பிரித்தானியா போரில் உள்ளது…ஆனால் மக்களுக்கு தெரியாது: ராணுவ தலைவர் வெளிப்படை | Uk Is At War With Russia Ex Military Chief Says

ரஷ்யாவுடனான பிரித்தானியாவின் போர்

போர் நடவடிக்கையானது 9 மாதங்களாக நடந்து வரும் நிலையில், 2013 முதல் 2016 வரை பிரித்தானியாவின் பாதுகாப்புப் படைகளின் தலைவராக பணியாற்றிய லார்ட் ஹொட்டன், ரஷ்யாவுடன் பிரித்தானியா போரில் உள்ளது என தெரிவித்துள்ளார்.

ரஷ்யா, பிரித்தானியா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு இடையே ஒரு பரந்த மூலோபாய மோதல் இருப்பதாக வாதிட்டார். 

அத்துடன் ஜனாதிபதி புடின் இன்னும் வெற்றி பெறும் சூழ்நிலை உள்ளது அல்லது ரஷ்யாவால் குறைந்தபட்சம் சாதகமான அமைதிக்கான சூழ்நிலையை உருவாக்க முடியும் என்று நான் கவலைப்படுகிறேன் என தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவுடன் பிரித்தானியா போரில் உள்ளது…ஆனால் மக்களுக்கு தெரியாது: ராணுவ தலைவர் வெளிப்படை | Uk Is At War With Russia Ex Military Chief SaysYuriy DYACHYSHYN / AFP

பிரித்தானியாவின் தற்போதைய வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு உக்ரைன் போர் முக்கிய காரணம் என்று கூறிய லார்ட் ஹொட்டன், பிரெக்சிட் மற்றும் அரசாங்க பொருளாதார இயலாமை ஆகியவை வாழ்க்கைச் செலவு நெருக்கடியில் மிகவும் குறிப்பிடத்தக்க காரணியாக இருக்கும் போது நாம் உண்மையில் போரில் இருக்கிறோம் என தெரிவித்தார். 

ஆனால் அது பெரும்பாலான மக்கள் அங்கீகரிக்கும் வகையிலான போர் அல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.