இது முழுமையான பேரழிவு! உலகக்கோப்பையில் இருந்து வெளியேறியது குறித்து ஜேர்மனி வீரர் வேதனை


கத்தார் உலகக்கோப்பை தொடரில் இருந்து ஜேர்மனி வெளியேறியது குறித்து அந்த அணியின் வீரர் தாமஸ் முல்லர் வேதனை தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை வெளியேற்றம்

அல் பாய்ட் மைதானத்தில் நேற்று நடந்த உலகக்கோப்பை போட்டியில், ஜேர்மனி அணி 4-2 என்ற கோல் கணக்கில் கோஸ்டாரிகா அணியை வீழ்த்தியது.

ஆனால், 4 புள்ளிகளை மட்டுமே பெற்றிருந்த ஜேர்மனி அணி, அதிக கோல்களையும் விட்டுக் கொடுத்திருந்ததால் சூப்பர் 16 வாய்ப்பை இழந்தது.

அதே சமயம் 6 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்த ஜப்பானும், 4 புள்ளிகள் பெற்றாலும் குறைந்த கோல்கள் விட்டுக்கொடுத்த ஸ்பெயினும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றன.

இது முழுமையான பேரழிவு! உலகக்கோப்பையில் இருந்து வெளியேறியது குறித்து ஜேர்மனி வீரர் வேதனை | German Player Muller Sad Exit Fifa World Cup

@Getty

உலகக்கோப்பையில் ஜேர்மனி அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக Group stage சுற்றுடன் வெளியேறி இருப்பது அந்நாட்டு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.

தாமஸ் முல்லர்/Thomas Muller

@Getty Images


நட்சத்திர வீரர் தாமஸ் முல்லர்

போட்டி முடிந்ததும் பேசிய ஜேர்மனி அணியின் நட்சத்திர வீரர் தாமஸ் முல்லர், உலகக்கோப்பையில் இருந்து வெளியேறியது முழுமையான பேரழிவு என குறிப்பிட்டார்.

மேலும் பேசிய அவர், ‘இது சக்தியற்ற உணர்வு. இது எங்களுக்கு நம்பமுடியாத கசப்பான அனுபவம். ஏனெனில் எங்களுக்கு முடிவு (வெற்றி) போதுமானதாக இருந்தது.

நாங்கள் ஒன்றாக பல சிறந்த தருணங்களை அனுபவித்திருக்கிறோம். எல்லாவற்றுக்கும் நன்றி.

நான் எப்போதும் ஆடுகளத்தில் என் மனதை வெளிப்படுத்த முயற்சித்தேன். சில சமயம் ஆனந்தக் கண்ணீர், சில சமயம் வலி. அன்புடன் செய்தேன். மற்ற எல்லாவற்றையும் பற்றி நான் இங்கே சிந்திக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

தாமஸ் முல்லர்/Thomas Muller

@AFP

2014ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் தனது அணிக்காக முக்கிய பங்கு வகித்த முல்லர், 121 போட்டிகளில் 44 கோல்கள் அடித்துள்ளார்.     



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.