இலங்கையர்களை சுற்றுலா வீசாவில் மலேசியாவிற்கு அனுப்பும் மோசடி அம்பலம்


இலங்கையர்களை சுற்றுலா வீசா மூலம் மலேசியாவிற்கு அனுப்பும் மற்றுமொரு மோசடி அம்பலமாகியுள்ளது.

இந்த மோசடியை நடத்தும் நபர்களை கைது செய்ய வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.

இலங்கையர்களை சுற்றுலா வீசாவில் மலேசியாவிற்கு அனுப்பும் மோசடி அம்பலம் | Another Smuggling Route Malaysia On Tourist Visa

புலனாய்வுப்பிரிவினர் விசாரணை

மலேசியாவிற்கு விஜயம் செய்து வந்த 14 பேர் கொண்ட இலங்கையர்களில் நேற்று (1) கட்டுநாயக்க விமான நிலையத்தில் மேற்கொண்ட சோதனையின் போது, ​​அவர்களில் ஒன்பது பேர் சுற்றுலா விசாவில் மலேசியாவிற்கு வேலைக்குச் செல்ல முயன்றுள்ளதாகவும் அதில் நான்கு பெண்களும், 5 ஆண்களும் அடங்குவதாகவும் தெரியவந்துள்ளது.

இலங்கையர்களை சுற்றுலா வீசாவில் மலேசியாவிற்கு அனுப்பும் மோசடி அம்பலம் | Another Smuggling Route Malaysia On Tourist Visa

இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் விமான நிலையப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இந்தக் குழுவினரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தியதன் பின்னர், மேற்படி நிறுவனம் இந்த மோசடி தொடர்பான உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளது.

குறித்த குழுவினரை மேலதிக விசாரணைகளுக்காக பணியகத்தின் புலனாய்வுப் பிரிவிற்கு அனுப்பியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.