பதோஹி : உத்தர பிரதேசத்தில் தரைவிரிப்பு தொழிற்சாலை ஒன்றில் குழந்தை தொழி லாளர்களாக இருந்த ஏழு சிறுவர்களை போலீசார் மீட்டனர்.
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு மிர்சாபூர் மாவட்டத்தில் சுனில் குமார் மவுரியா என்பவருக்கு தரைவிரிப்பு தயாரிக்கும் தொழிற் சாலை உள்ளது. இங்கு குழந்தை தொழிலாளர்கள் பணிபுரிவதாக கிடைத்த தகவலையடுத்து போலீசார் மற்றும் குழந்தை கடத்தல் தடுப்பு படையினர் சோதனையிட்டனர்.
அப்போது மவுரியா சிலருடன் தப்பியோட முயற்சித்தார். அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். பிடிபட்டவர்களில் ஏழு பேர் 9 முதல் -15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள். அவர்கள் இங்கு குழந்தை தொழிலாளர்களாகப் பணியாற்றியதாகவும் இவர்கள் பீகார் மாநிலம் அராரியாவை சேர்ந்தவர்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து மவுரியா மீது குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement