கத்தார் உலக கோப்பை கால்பந்து தொடரின் போட்டியில் கனடாவை மொரோக்கோ அணி வீழ்த்தியுள்ளது.
கனடா – மொராக்கோ
22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது.
இதில் நடைபெற்ற F பிரிவு ஆட்டத்தில் கனடா – மொரோக்கோ அணிகள் மோதின.
இதில் கனடா அணியை 1-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மொரோக்கோ அணி வெற்றி பெற்றது.
கனடா அணி 2 போட்டிகளில் தோல்வியடைந்ததால், அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.
AP Photo/Alessandra Tarantino
ஆனால் மொரோக்கோ அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற வெற்றிபெற வேண்டிய கட்டாயம் இருந்தது.
இந்த சூழலில் தான் மொரோக்கோ அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
இதனை தொடர்ந்து மொரோக்கோ அணி செவ்வாய்கிழமையன்று ஸ்பெயின் அணியுடன் மோதவுள்ளது.
sports.yahoo