கன்னியாகுமரி மாவட்டத்தில் அண்ணனை கத்தியால் குத்தி தம்பி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் திட்டுவிளை ஜோசப் காலனி பகுதியை சேர்ந்தவர் கொத்தனார் ஜார்ஜ் எடிசன்(42). இவரது சகோதரர் மார்ட்டின் ஜெயராஜ் (40). இந்நிலையில் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த ஜார்ஜ் எடிசனுக்கு அவரது தம்பிக்கும் இடையே குடிபோதையில் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த தம்பி, அண்ணனின் நெஞ்சில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் நிலை தடுமாறி ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த அண்ணனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தம்பி உடனடியாக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
மேலும் மருத்துவமனையில் டாக்டரிடம் தனது அண்ணன் விபத்தில் சிக்கியதாக கூறியுள்ளார். ஆனால் ஜார்ஜ் எடிசனை பரிசோதனை செய்த மருத்துவர் அவருக்கு கத்திக்குத்து காயங்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து டாக்டர் இது குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் அவர் கத்தியால் குத்தியதில் அண்ணன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மார்ட்டின் ஜெயராஜிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது அவர் போலீசாரிடமிருந்து தப்பிக்க முயன்றுள்ளார். இதையடுத்து துரத்தி பிடித்த போலீசார், மார்ட்டின் ஜெயராஜை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதில் குடி போதையில் ஏற்பட்ட தகராறில் அண்ணனை குத்தியதை மறைக்க விபத்தில் சிக்கியதாக நாடகமாடியதை மார்ட்டின் ஜெயராஜ் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.