சென்னை நந்தனத்தில் இயங்கி வரும் உடற்கல்விகள் கல்லூரியில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், இந்த கல்லூரியின் முதல்வராக இருக்கும் ஜான் ஆபிரகாம் என்பவர் மீது, கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் கடந்த மூன்று மாதங்களாக கல்லூரி முதல்வர் ஜான் ஆபிரகாம், செல்போனில் ஆபாசமாக பேசியும், மெசேஜ்களை அனுப்பியும் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக அந்த மாணவி புகாரியில் தெரிவித்துள்ளார்.
சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் மாணவி அளித்த புகாரின் பேரில், போலீசார் மாணவியின் செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது கல்லூரி முதல்வர் ஜான் ஆபிரகாம் தொடர்ச்சியாக கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் விதமாக ஆபாச மான குறுஞ்செய்திகளை அனுப்பிவந்தது தெரியவந்தது.
இதனை அடுத்து ஜான் ஆபிரகாம் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்வதற்கு உண்டான நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளனர்.