சாம்ராஜ் நகர், போலீஸ் ஜீப்பில் இருந்து தவறி விழுந்து வாலிபர் உயிரிழந்தது தொடர்பாக, மூன்று போலீசார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சாம்ராஜ் நகர் எலந்துார் அருகே உள்ள குந்துார் மோளா கிராமத்தைச் சேர்ந்தவர் நிங்கராஜு, 24. இவர் மீது சிறுமி கடத்தல் தொடர்பாக, மாம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
போலீசார், கடந்த மாதம் 29ம் தேதி நிங்கராஜை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
அப்போது, அவர் ஓடும் ஜீப்பில் இருந்து குதித்து தப்ப முயன்றார். இதில் பலத்த காயம் அடைந்த அவர், எலந்துார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நிங்கராஜின் தாய், தன் மகன் சாவுக்கு போலீசார் தான் காரணம் என குற்றம் சாட்டி, கிராமத்தினருடன் எலந்துார் போலீஸ் நிலையம் முன் நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினர்.
பின், எஸ்.பி., சிவகுமாரிடம், தன் மகன் சாவுக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார்அளித்தனர்.
இதன் அடிப்படையில், எலந்துார் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சிவமதியா, மாம்பள்ளி நிலைய எஸ்.ஐ., மாதே கவுடா, ஏட்டு சோமண்ணா ஆகிய மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement