தென் மாநிலங்களில் ஐயப்பன் கோவில் சீசன் தொடங்கியுள்ளதால் பூக்களின் விலை சில தினங்களாக அதிகரித்து காணப்பட்டது. மேலும் திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்று வருவதாலும், முகூர்த்த காலம் என்பதாலும் பூக்களின் விலை கிடுகிடு என உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு மலர் சந்தைக்கு ஓசூர், மதுரை, சேலம், திண்டுக்கல், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பூக்கள் வருவது வழக்கம்.
தற்பொழுது பண்டிகை கால சீசன் என்பதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. சென்னை கோயம்பேடு பூக்கள் சந்தையில் ஒரு கிலோ மல்லிகை பூ 900 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் தற்பொழுது 1300 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
அதேபோன்று 360 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஜாதி மல்லி தற்பொழுது 500 ரூபாய்க்கும், முல்லைப் பூ 750 ரூபாய்க்கும் கனகாம்பரம் 600 ரூபாய்க்கும் சாமந்திப்பூ 100 ரூபாய்க்கும் பன்னீர் ரோஜா 100 ரூபாய்க்கும் அரளிப்பு 200 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. பூக்களின் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.