மேகன் குறித்து நெருங்கிய நண்பர் சொன்ன கருத்து! மனம் புண்ணாகி இளவரசர் ஹரி எடுத்த முடிவு


மேகன் மெர்க்கல் தொடர்பில் தனது நெருங்கிய நண்பர் மனதை புண்படுத்தும் வகையில் கருத்து சொன்னதால் தன் திருமணத்திற்கு அவரை இளவரசர் ஹரி அழைக்காமல் தவிர்த்தார் என தெரியவந்துள்ளது.

ஹரியின் பால்ய சினேகிதன்

பிரித்தானிய இளவரசர் ஹரிக்கும், மேகன் மெர்க்கலுக்கும் கடந்த 2018ல் திருமணம் நடந்தது.
திருமணத்திற்கு முன்னர் ஹரியின் பால்ய நண்பர் டாம் இன்ஸிகிப் ஹரி, மேகனை சந்தித்ததில் இருந்து நண்பனை இழந்தது போல் உணர்ந்ததாக கூறினார்.

அவரின் இந்த கருத்து ஹரியை வேதனைப்படுத்தியதன் விளைவாக தனது திருமணத்திற்கு டாமை அழைக்க வேண்டாம் என அவர் முடிவெடுத்தார்.

மேகன் குறித்து நெருங்கிய நண்பர் சொன்ன கருத்து! மனம் புண்ணாகி இளவரசர் ஹரி எடுத்த முடிவு | Meghan Markle Harry Pal Comment

OLI SCARFF/AFP via Getty Images

மனம் புண்பட்டது

ஹரியின் நண்பர் டாம் நல்ல இடத்தில் இருந்து வந்தவர் என்றாலும் அவரின் கருத்து ஹரியை மிகவும் புண்படுத்தியது என Finding Freedom புத்தகத்தின் ஆசியர்களான ஓமிட் ஸ்கோபி மற்றும் கரோலின் துரண்ட் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், மேகன் மற்றும் அவரது மனைவி லாராவுடன் இளவரசர் ஹரியின் உறவு தொடர்பிலும் டாம் கேள்வியை எழுப்பினார் எனவும் தெரிவித்துள்ளனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.