தனியார் துறை முன்னணி வங்கியான தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி (TMB) மேக்ஸ் லைஃப் இன்சுரன்ஸ் கம்பெனி மற்றும் சோழமண்டலம் எம்.எஸ் பொது காப்பீட்டு நிறுவனத்துடன் வணிக ஒப்பந்தம் செய்துள்ளது.
மேக்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் இந்தியாவின் மிகப்பெரிய வங்கி சாராத தனியார் காப்பீட்டு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் வாடிக்கையாளருக்கு காப்பீடுகளை வழங்கி வருகிறது.

சோழமண்டலம் எம்.எஸ் பொதுக் காப்பீட்டு நிறுவனம் வாகனம், தனி நபர் உடல் ஆரோக்கியம், சொத்து, விபத்து, பொறியியல், பொறுப்பு, கடல் சார்ந்த, பயணம் மற்றும் விவசாய விளைபொருள் இழப்புகளை ஈடு செய்யும் காப்பீட்டுத் திட்டங்களை தனி நபர் மற்றும் நிறுவங்களுக்கும் வழங்கி வருகிறது.
இந்த இரண்டு நிறுவனங்களும் டி.எம்.பி என்னும் தனியார் வங்கியுடன் வணிக ஒப்பந்தம் செய்துள்ளது.
இதன்மூலம் டி.எம்.பி வங்கி வடிக்கையாளர்கள், இந்த வங்கியிலேயே மேக்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் பாலிசிகளையும், சோழமண்டலம் எம்.எஸ் பொதுக் காப்பீட்டு நிறுவனத்தின் காப்பீட்டையும் பெற்றுக் கொள்ளமுடியும்.

இதுகுறித்து தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி எஸ்.கிருஷ்ணன் கூறியதாவது, “டி.எம்.பி வங்கி பங்குச் சந்தையில் பட்டியலிட்டப்பிறகு, வங்கி கிளைகளை நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யும் திட்டத்தில் தனது செயல்பாடுகளில் வேகம்காட்டி வருகிறது. அதற்காக தனது திட்டங்கள் மற்றும் சேவைகளில் பல்வேறு அம்சங்களை அதிகப்படுத்தி வருகிறது. அதற்கான முயற்சியில் இந்த ஒப்பந்தம் ஒரு மகத்தான நிகழ்வு ஆகும். இனி இந்த காப்பீட்டு நிறுவனங்களின் பாலிசிகளை வாடிக்கையாளர்கள் டி.எம்.பி வங்கியிலேயே பெற்றுக்கொள்ளலாம்” என்றார்.