சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிபிம்யாட் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வந்திருந்தார். அப்பொழுது அவருடைய பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார்.
குறிப்பாக பாதுகாப்பு ஏற்பாடுகளில் குளறுபடி இருந்ததாகவும் போலீஸ் வைத்திருந்த மெட்டல் டிடெக்டர், டோர் மெட்டல் டிடெக்டர் போன்ற பல கருவிகள் வேலை செய்யவில்லை என தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு பத்திரிக்கையாளர் சந்திப்பில் பிரதமர் மோடி தமிழக வந்தபோது அவரது பாதுகாப்பில் எந்த குறைபாடும் ஏற்படவில்லை என விளக்கம் அளித்து இருந்தார். இந்த நிலையில் கடந்த 29ஆம் தேதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்து புகார் மனு அளித்தார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி விளக்கம் கேட்டு தமிழக தலைமை செயலாளர் இறையன்புக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.