பெங்களூரு பிரபல ரவுடியான வில்சன் கார்டன் நாகா, நேற்று முன்தினம் இரவு அமைச்சர் சோமண்ணாவை சந்தித்தாக தகவல்கள் வெளியாகின.
இது தொடர்பாக, அமைச்சர் சோமண்ணா கூறியதாவது:
வில்சன் கார்டன் நாகா யார் என்றே தெரியாது. அவரை இதுவரை சந்தித்ததில்லை. தினமும் ஏராளமான மக்கள் என்னைப் பார்க்க வருகின்றனர். நாகா யார்; திம்மா யார்; பொம்மா யார் என்று தெரியவில்லை. என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். சட்டத்துக்கு புறம்பான விஷயங்களைச் செய்ததில்லை. நான் 55 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். 11 தேர்தல்களை சந்தித்துள்ளேன். யார் வருவர், போவர் என்று தெரியவில்லை.
நான் நல்ல வாழ்க்கை நடத்தி விட்டேன். என் வயதுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். இந்த விஷயங்கள் என் மனதை காயப்படுத்துகின்றன. வில்சன் கார்டன் நாகாவுடன் எனக்கு எந்த விவகாரமும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement