மும்பை செல்லும் வந்தே பாரத் ரெயில் நேற்று மாலை மாடு மீது மோதி விபத்துக்குள்ளானது.
காந்திநகர்-மும்பை செல்லும் வந்தே பாரத் அதிவிரைவு ரெயில் நேற்று மாலை மாடு மீது மோதியது. இதனால் ரெயிலின் முன்பக்கத்தில் சிறிய சேதம் ஏற்பட்டது. இந்த வழித்தடத்தில் வந்தே பாரத் ரெயில் இரண்டு மாதங்களுக்கு முன்பு இயக்கத் தொடங்கியது. இந்த நிலையில் நான்காவது முறையாக விபத்து ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மேற்கு ரெயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி சுமித் தாக்கூர் கூறும்போது, நேற்று மாலை 6.23 மணியளவில் குஜராத்தின் உத்வாடா மற்றும் வாபி இடையே லெவல் கிராசிங் கேட் எண் 87-க்கு அருகில் கால்நடை மீது ரெயில் மோதியது. இதனால் ரெயிலின் முன்பகுதியில் சிறிய அளவில் சேதம் ஏற்பட்டது. எந்த செயல்பாட்டு சிக்கல்களும் இல்லை என்று கூறியுள்ளார்.
சிறிது நேரம் நிறுத்தப்பட்ட ரெயில் பின்னர் மாலை 6.35 மணிக்கு மீண்டும் பயணத்தைத் தொடங்கியது. வந்தே பாரத் ரெயிலில் தொடர்ந்து ஏற்படும் விபத்துக்களால் பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர். விபத்துகளை தவிர்க்க முழு முயற்சி மேற்கொண்டு வருவதாக ரெயில்வே நிர்வாகம் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
newstm.in