ஸ்டாலின் பொம்மை முதல்வர்; எடப்பாடி பழனிச்சாமி சாடல்.!

சேலம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ஏ.வி.ராஜு அவர்களின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழா, இன்று சேலம் ஸ்டீல் பிளான்ட் ரோட்டின் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நூல் வெளியீட்டு விழாவில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ஏ.வீ ராஜு அவர்களின் சுய சரிதை நூலை வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் அவர் பேசும்போது, ‘‘

ஆட்சியில் தமிழக மக்கள் அதிக அளவில் வேதனடைந்து வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. போதைப் பொருட்கள் அதிக அளவில் பெருகிவிட்டது. மேலும் சொத்து வரி, வீட்டு வரி, குடிநீர் வரி அனைத்தும் பன்மடங்கு உயர்த்தி உள்ளது திமுக அரசு. இதனால் தமிழக மக்கள் மிகவும் அவதி உற்று வருகின்றனர்.

கொரோனா தொற்றிலிருந்து தற்போது மீண்டு வந்த நிலையில், இப்போதுதான் தமிழகம் சகஜ நிலைக்கு திரும்பி வருகிறது. இந்த நிலையில் வரிகளை உயர்த்தியது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திமுக ஆட்சி குறித்து பொதுமக்களிடம் கேட்டால், ஆட்சியோட அவல நிலை பற்றி தெரியும்.

நாட்டு மக்களை பற்றி முதல்வர் சிந்திக்கவில்லை, வீட்டு மக்களைப் பற்றி தான் சிந்தித்து வருகிறார்.

குடும்பத்தில் இருப்பவர்களுக்கு என்ன பதவி கொடுக்க வேண்டும், அவர்கள் வருமானம் எவ்வாறு ஈட்ட வேண்டும் என, அதனை பற்றி சிந்தித்து தான் முதல்வர் செயல்பட்டு வருகிறார். அதிமுகவின் தொண்டர்கள் தான் திமுகவை வழிநடத்தி செல்கிறார்கள்.

நான் Travel ஆகி வந்ததுக்கு Reviews தான் காரணம்

அதிமுகவில் அங்கம் வகித்த 8 எட்டு பேர், தற்போது திமுகவில் உள்ளனர். அங்கும் அதிமுக தொண்டன் தான் திமுகவை வழிநடத்திக் கொண்டிருக்கின்றனர். அதிமுகவில் இருந்து சென்றவர்களுக்கு பதவி கொடுக்கிறார்கள். திமுகவில் விசுவாசம் என்ற சொல்லுக்கு அர்த்தம் இல்லை. திமுகவில் காலம் முழுவதும் உழைத்தாலும் கூட பதவி கிடைக்காது. கமிஷன், கலெக்சன் இவைதான் உள்ளது. இதை யார் செய்து கொடுக்கிறார்களோ? அவர்களுக்கு தான் பதவி கொடுப்பார்கள்.

எம்ஜிஆர் பெயரை சொன்னால் தான் வாக்கு கிடைக்கும் என்ற நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினும் எம்ஜிஆர் பெயரை சொல்வதற்கு துவங்கிவிட்டார். திமுக தலைவர் ஸ்டாலின் விரைவில் அதிமுகவின் சேர்ந்து விடும் நிலைகூட வரலாம்.

திமுக தலைவர் ஸ்டாலின் எம்ஜிஆர் புகழ் பாடுகிறார் என்றால், அது அதிமுகவுக்கு கிடைத்த பெருமை. திமுக ஆட்சியில் மக்கள் படும்பாடு ஏராளம். தமிழக முதலமைச்சர் மக்களைப் பற்றிய தெரியாத முதலமைச்சர். பொம்மை முதலமைச்சராக உள்ளார்’’ என அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியின் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.