37 வயது வரை திருமணம் செய்து வைக்கல! நடிகர் ராஜ்கிரணின் 2வது மனைவியின் மகள் கண்ணீர்


நடிகர் ராஜ்கிரண் வீட்டில் உள்ள நகைகளை தன்னிடம் கொடுக்க வேண்டும் என அவரின் வளர்ப்பு மகன் ஜனத் ப்ரியா பொலிசாரிடம் கேட்டு கொண்டுள்ளார்.

காதல் திருமணம்

தமிழகத்தின் திருச்சியில் உள்ள துறையூரைச் சேர்ந்த இளங்கோவன் பத்மஜோதி தம்பதியரின் மகள் ப்ரியா. கடந்த 2014 ஆம் ஆண்டு இளங்கோவனை பிரிந்த பத்மஜோதியை, நடிகர் ராஜ்கிரண் 2-வது திருமணம் செய்து கொண்டார்.

பத்மஜோதியை கதீஜா என்றும் வளர்ப்பு மகளான ப்ரியாவை ஜனத்ப்ரியா என்றும் அழைத்து வந்தார். பிரியா (37) சினிமா மற்றும் சீரியல் நடிகரான முனீஸ் ராஜாவை முகநூல் மூலம் காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார்.

இதனால் விரக்தி அடைந்த ராஜ்கிரண், தனது வளர்ப்பு மகளுக்கும், தனக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்றும், தன்னிடம் இருந்து நகை மற்றும் பணத்துக்காகவும், நற்பெயரை கெடுப்பதற்காகவும் அந்த நடிகர் தனது மகளை அழைத்துச் சென்றிருப்பதாக அறிக்கை வெளியிட்டார்.

37 வயது வரை திருமணம் செய்து வைக்கல! நடிகர் ராஜ்கிரணின் 2வது மனைவியின் மகள் கண்ணீர் | Actor Rajkiran Daughter Family Issue

வீட்டில் வேலைக்காரியாக

அதையடுத்து ப்ரியா தனது தந்தை இளங்கோ கொடுத்த நகைகளை, தாய் கதீஜாவிடம் கேட்டதாகச் சொல்லப்படுகிறது. இதையடுத்து கதீஜா ராஜ்கிரண் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில், தனது கணவர் நடிகர் ராஜ்கிரன் மீது அவதூறாக பேசியும், தனது குடும்ப நகையை எடுத்துச் சென்ற ப்ரியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து காவல்நிலையத்தில் ப்ரியா தனது கணவருடன் வந்து விளக்கமளித்தார்.
பின்னர் அவர் பேசுகையில், தனது உண்மையான தந்தை இளங்கோவன் மற்றும் பாட்டி அளித்த 40 சவரன் நகைகளை, ராஜ்கிரணுடன் சென்ற தனது தாய் வைத்துக்கொண்டு தரமறுக்கிறார்.

எனக்கு 37 வயது வரை திருமணம் செய்து வைக்காமல் அவர்கள் வீட்டில் வேலைக்காரியாக நடத்தினார்கள், நான் அப்படியே இருக்க வேண்டும் என்பதே அவர்கள் எண்ணம். என் நகைகளை மீட்டு கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

37 வயது வரை திருமணம் செய்து வைக்கல! நடிகர் ராஜ்கிரணின் 2வது மனைவியின் மகள் கண்ணீர் | Actor Rajkiran Daughter Family Issue



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.