யாழில் இரு குழுக்களுக்கிடையில் வாள்வெட்டு தாக்குதல்! இருவர் படுகாயம்


யாழ்ப்பாணம் – தாவடி மதுபான விற்பனை நிலையம் அருகே இரண்டு குழுக்களுக்கு
இடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளனர்.

இன்றிரவு சனிக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த இருவரும்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழில் இரு குழுக்களுக்கிடையில் வாள்வெட்டு தாக்குதல்! இருவர் படுகாயம் | Clashes Between Two Groups In Jaffna

பொலிஸார் மேலதிக விசாரணை

கோண்டாவில் மற்றும் இணுவில் பகுதியைச் சேர்ந்த 34 மற்றும் 30 வயது
மதிக்கத்தக்கவர்களே வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.