அந்தமானில் 21 தீவுகளுக்கு `வீர தீர விருது’ பெற்ற ராணுவத்தினர் பெயர்: ஒன்றிய அரசு திட்டம்

போர்ட் பிளேர்: அந்தமான் நிக்கோபாரில் 21 தீவுகளுக்கு வீர தீர விருது பெற்றவர்களின் பெயர் சூட்டப்பட உள்ளது. அந்தமான் நிக்கோபார் யூனியன் பிரதேசத்தில் உள்ள மக்கள் வசிக்காத தீவுகளில் 21க்கு பரம் வீர் சக்ரா உள்ளிட்ட வீர தீர விருதுகள் பெற்ற ராணுவ வீரர்களின் பெயர்களை சூட்ட ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. நாட்டிற்காக உயிர் நீத்த மேஜர் சோம்நாத் நினைவாக `ஐஎன்ஏஎன்370’ என பெயரிடப்பட்ட தீவு சோம்நாத் தீவு என்றும், கரம் சிங் நினைவாக `ஐஎன்ஏஎன்308` என பெயரிடப்பட்ட தீவு இனி கரம்சிங் தீவு என அழைக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்தமான் நிக்கோபார் எம்பி குல்தீப் ராய் சர்மா கூறுகையில், “பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் யூனியன் பிரதேச அரசின் உதவியுடன் 21 தீவுகளுக்கு வீரர்களின் பெயரை தேர்வு செய்யும் ஒன்றிய அரசின் திட்டம் வரவேற்கத் தக்கது. சிறிய அளவிலான அவர்களது வாழ்க்கை வரலாறு புத்தகத்தை மாணவர்களுக்கு வழங்குவதன் மூலம் அவர்கள் வீரர்களின் நாட்டுப் பற்று, தியாகம் பற்றி தெரிந்து கொள்ள முடியும்,’’ என்று தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.