சண்டிகர் :“பஞ்சாபில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பாகிஸ்தான் பகுதியில் இருந்து எல்லை தாண்டி வந்த மூன்று ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டு, 12 கிலோ ‘ஹெராயின்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது,” என, பஞ்சாப் டி.ஜி.பி., கவுரவ் யாதவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, கவுரவ் யாதவ் மேலும் கூறியிருப்பதாவது:
நம் அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து ஆளில்லா குட்டி விமானங்கள் வாயிலாக போதைப் பொருட்கள் மற்றும் ஆயுதங்கள், இங்குள்ள பயங்கரவாதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
இதையடுத்து, கடந்த வாரம் மாநில போலீசார் மற்றும் எல்லைப் பாதுகாப்பு படையினர் இணைந்து, எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த ஒரு வாரத்தில் மட்டும், பாக்.,கில் இருந்து வந்த மூன்று ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.
இவற்றில் இருந்து 12 கிலோ ஹெராயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது. இவற்றின் சர்வதேச மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது பற்றி எல்லைப் பாதுகாப்பு படை இயக்குனர் பங்கஜ் சிங் கூறுகையில், “சமீப காலமாக பாகிஸ்தானில் இருந்து ட்ரோன்கள் வாயிலாக பயங்கரவாதிகள் நமக்கு மிரட்டல் விடுத்து வருகின்றனர். இந்த ஆண்டில் இதுவரை 16 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுஉள்ளன,” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement