காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

நாட்டின் துறைமுகம் இலாபகரமான நிறுவனமாக மாறியுள்ளதாக துறைமுகங்கள்  , கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்காக 45 மில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தியா வழங்கியுள்ளது சலுகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள இந்த கடன் திட்டத்தில் அங்கு அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அலைதாங்கி உட்பட பல்வேறு தேவைகளை உருவாக்குவதற்கு சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அமைச்சர்; தெரிவித்தார்.

எதிர்காலத்தில் கொழும்பு துறைமுகம், கொள்கலன் முனையங்கள் மட்டுமன்றி பயணிகள் கப்பல்களுக்கான துறைமுகமாக அபிவிருத்தி செய்யப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்த வருடத்தில் துறைமுகத்தறையில் சுமார் 39 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.கடந்தவருடத்தில் இத்தொகை 15.5 பில்லியன் ரூபாவாக அமைந்திருந்ததாகவும் அவர்  தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர் .எதிர்காலத்தில் மேலும் 6 பயணிகள் கப்பல்கள் இலங்கைக்கு வரவுள்ளதாகவும் கூறினார்.

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சுக்கான நிதி ஒடுக்கீடு தொடர்பில் நடைபெற்ற இந்த ஊடக சந்திப்பில்,சமகால அரசாங்கம் துறைமுகத்தின் அபிவிருத்திக்காக பாரிய தொகை நிதியை செலவிட வேண்டியுள்ளது கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை நிர்மாணிப்பதற்கு சுமார் 480 அமெரிக்க டொலர்கள் தேவைப்படுகிறது. இதனை அரசாங்கமே வைத்திருக்க வேண்டுமென துறைமுக தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. கிழக்கு முனையத்தை அரசாங்கமே மேம்படுத்த வேண்டும். இந்த நோகத்துடனேயே அரசாங்கம் செயல்பட்டுவருவதாகவும் அமைச்சர்  கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.