சத்தீஸ்கரில் சுண்ணாம்புக்கல் சுரங்கத்தில் மண் சரிந்ததில் ஆறு பெண்கள் மற்றும் ஒரு ஆண் என ஏழு பேர் நேற்று மண்ணில் புதைந்து பலியாகினர்.
சத்தீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு பஸ்தார் மாவட்டத்தில் மால்காவோன் கிராமத்தில் உள்ள ஒரு சுண்ணாம்புக் கல் சுரங்கத்தில் நேற்று தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அங்கு சில பெண்கள் மண்ணை எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென மண் சரிந்ததில் அனைவரும் குழியில் விழுந்து புதைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தனர்.
‘முதல் கட்ட விசாரணையில் ஆறு பெண்கள்மற்றும் ஒரு ஆண் என ஏழு பேர் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. அனைவரது உடல்களும் மீட்கப்பட்ட நிலையில் மீட்புப் பணி தொடர்கிறது’ என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement