பொதுவாக தங்கம் என்றால் நினைவிற்கு வருவது பெண்கள் தான். அதிலும் தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு தங்கத்தின் மீதான பேராசை மிகவும் அதிகம். தென்னிந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது.
உலகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக ஏற்பட்ட தொழில்துறை தேக்கத்தின் காரணமாக உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பி வருகின்றனர். பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளை தற்போது தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர்.
அதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாகவே தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் நிலவி வந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
அந்த வகையில், நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 55 ரூபாய் அதிகரித்து ரூ.5,020-க்கும், சவரனுக்கு 440 ரூபாய் அதிகரித்து, ரூ.40,080-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
ஆனால், இன்று ஆபரணத் தங்கம் கிராமுக்கு 4 ரூபாய் குறைந்து 5,016 ரூபாய்க்கும், சவரனுக்கு 32 குறைந்து 40,128 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், இன்று வெள்ளி விளையும் அதிகரித்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்று 71.60 ரூபாய்க்கும், கிலோ ஒன்று 71,600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.