இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் ரயிலின் ஜன்னலோரம் அமர்ந்திருந்த நபர், இரும்பு கம்பி பாய்ந்தது உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஜன்னலோரம் பயணித்த நபர்
டெல்லியில் இருந்து சென்று கொண்டிருந்த நிலஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஹரிகேஷ் குமார் என்பவர் பயணித்தார்.
அவர் ஜன்னலோரம் அமர்ந்து பயணம் செய்தார்.
உத்தர பிரதேசத்தின் பிரக்யாராஜ் அருகே 130 கிலோ மீற்றர் வேகத்தில் ரயில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென ஜன்னலின் கண்ணாடியை உடைத்துக் கொண்டு இரும்பு கம்பி ஒன்று நுழைந்தது.
வேகமாக பாய்ந்த கம்பி
அந்த கம்பி ஹரிகேஷ் குமாரின் கழுத்தில் வேகமாக பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனை பார்த்த சக பயணிகள் பயத்தில் அலறினர்.
அதன் பின்னர் ரயில் நிறுத்தப்பட்டு, ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், ஹரிகேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஹரிகேஷ் குமார் கழுத்தில் பாய்ந்த இரும்பு கம்பியானது தண்டவாளத்தில் கிடந்திருக்கலாம் என்றும், ரயிலின் சக்கரம் வேகமாக ஏறியதால் கம்பி உள்ளே பாய்ந்திருக்கலாம் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.