தமிழகத்தில் 16 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

சென்னை:
மிழகத்தில் 16 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இளைஞர் நலன், விளையாட்டு வளச்சித்துறை கூடுதல் தலைமை செயலராக அதுல்ய மிஸ்ரா, வீடு, நகர்ப்புற மேம்பாட்டுத்துறை முதன்மை செயலர் அபூர்வா, டெல்லி தமிழ்நாடு இல்ல முதன்மைச் செயலராக ஹிதேஷ்குமார் மக்வானா, சமூக நலம் மற்றும் பெண்கள் நல வாரிய செயலராக ஜதாக்

சமூக சீர்திருத்த துறை செயலராக டி.ஆபிரஹாம்,  தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறை செயலராக ஆர்.செல்வராஜ், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையின் சிறப்பு செயலராக ஆர்.லில்லி, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் ஆணையராக ஆர்.நந்தகோபால், பேரூராட்சிகள் இயக்குனராக கிரண் குராலா, உயர்கல்வித்துறையின் கூடுதல் செயலராக எஸ்.பழனிசாமி, நகர் ஊரமைப்பு இயக்க திட்ட இயக்குனராக பி.கணேசன், பிற்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழக இயக்குனராக அனில்மேஸ்ராம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மேலாண் இயக்குனராக இ.சரவணவேல்ராஜ், அரசு கேபிள் கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குனராக ஜான் லூயிஸ், சேலம் சாகோசர்வ் நிர்வாக இயக்குனராக எம்.என்.பூங்கொடி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.