ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தற்போது குறிப்பிடத்தக்க இலாபத்தை ஈட்டி வருவருகிறது.
ஆனால் கடன் காரணமாக வெற்றிகரமாக நடத்துவதில் சிக்கல்கள் எழுந்துள்ளது. அதனை மறுசீரமைக்க வேண்டியுள்ளதாக அமைச்சர் நிமால் சிறிபால டீ சில்வா தெரிவித்துள்ளார்.
விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் தான் இது பற்றிய யோசனையினை அமைச்சரவைக்கு முன்வைத்திருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர் 100 கோடி அமெரிக்க டொலருக்கும் அதிகமான தொகையை ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் கடனாக செலுத்த வேண்டியுள்ளதாகவும் கூறினார்.