செல்போன் கடை ஒன்றில் வாடிக்கையாளரின் செல்போன் பேட்டரி திடீரென வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் ராட்லம் அருகே ஜாவ்ரா என்ற பகுதியில் உள்ள செல்போன் கடைக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர், தனது செல்போன் பேட்டரி கோளாறாக உள்ளது என்று கூறியுள்ளார்.
அதற்கு செல்போன் கடைக்காரர் பேட்டரி பழுதடைந்து விட்டது வேறு பேட்டரி மாற்ற வேண்டும் என்றார். அப்போது, அங்கிருந்த மற்றொரு நபர் பேட்டரி தேறுமா என்று ஒரு முறை பார்ப்போம் என கடைக்காரரிடம் கேட்டார்.
இதனையடுத்து அந்த பேட்டரியை எடுத்து செக் செய்தனர். அப்போது திடீரென்று தீப்பிடித்து அந்த செல்போன் பேட்டரி வெடித்தது. நல்ல வேளையாக அருகே இருந்து வாடிக்கையாளரும் கடைக்காரரும் பின்னால் நகர்ந்து காயங்கள் இன்றி தப்பினர்.
இந்த சம்பவத்தின் பரபரப்பு காட்சிகள் அப்படியே சிசிடிவியில் பதிவானது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சார்ஜ் போட்டுக்கொண்டே செல்போன், லேப்டாப் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களை பயன்படுத்தும் போது அவை வெடிக்கும் நிகழ்வுகளை நாம் கேள்விப்பட்டிருப்போம்.
ஆனால், செல்போன் கடையில் அதை ரிப்பேர் செய்யும் போது திடீரென வெடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in