திருமணம் நடைபெற்ற நாள் அன்றும் தன்னை சிலர் உருவ கேலி செய்ததாக நடிகை மஞ்சிமா மோகன் தெரிவித்துள்ளார்.
நடிகர் கார்த்தியின் மகனான, நடிகர் கௌதம் கார்த்திக்கும், நடிகை மஞ்சிமா மோகனுக்கும் அண்மையில் திருமணம் நடைபெற்றது. அவரது திருமணத்தில் ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
மஞ்சிமா மோகன் 2016இல் கவுதம் மேனன் இயக்கிய அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார். தேவராட்டம் படத்தில் கௌதம் கார்த்தியும், மஞ்சிமா மோகனும் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தின் ஷூட்டிங்கின்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து அண்மையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், மஞ்சிமாவின் உடல் எடை அதிகரித்திருப்பதை சமூக வலைதளங்களில் சிலர் கிண்டல் செய்து பதிவிட்டிருந்தனர்.
இதுபற்றி, மஞ்சிமா மோகன் அளித்த பேட்டியில், சோஷியல் மீடியாவில் மட்டுமல்ல, திருமணத்தின்போதும் தன்னை உருவ கேலி செய்ததாக கூறியுள்ளார். ஆனால் அதனை நான் பொருட்படுத்தவில்லை என்றும், இந்த எடையில் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
newstm.in