
பீகார் மாநிலம் கயாவில் இருந்து டெல்லி சென்றுகொண்டிருந்த தி மகாபோதி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் சிக்கியது.
ரோஹ்தாஸ் மாவட்டத்தில் உள்ள கயா தீன்தயாள் உபாத்யாய் ரயில் பாதையில் மகாபோதி எக்ஸ்பிரஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ரயிலின் இரண்டு பெட்டிகள் எஞ்சினில் இருந்து பிரிந்ததாக கூறப்படுகிறது.
சசரம் – கரபாண்டியா ரயில் நிலையங்களுக்கு இடையே செல்லும் போது இந்த சம்பவம் நடந்துள்ளது. வண்டி நகர்ந்துகொண்டு இருக்கும்போதே பெட்டிகள் கழன்றதை ஓட்டுநர் மற்றும் காவலாளிகள் கவனித்துள்ளனர்.

உடனடியாக ரயிலை நிறுத்திவிட்டு அருகில் உள்ள ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும் ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
அதன்பிறகு வந்த ரயில்வே துறை பொறியாளர்கள் ரயில் பெட்டிகளை மீண்டும் எஞ்சிடன் இணைத்தனர். இதற்காக 3:40 முதல் 4:22 வரை சுமார் 42 நிமிடங்கள் ரயில் நிறுத்துவைக்கப்பட்டது.
இந்த விபத்தால் எந்த பயணிக்கும் காயம் ஏற்படவில்லை என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஓட்டுநர் மற்றும் காவலாளியின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. விபத்து குறித்து ரயில்வே நிர்வாகம் விசாரித்து வருகிறது.
newstm.in