புதிதாக வாங்கியிருந்த பைக்கை ஓட்டிப்பார்க்க கொடுக்காத நபரை, அவரது நண்பர் கொடூரமாக கொலவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் ஆலஞ்சேரி என்ற பகுதியில் மிதுன் என்ற இளைஞர் செல்போன் கடை நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் வைசாக் என்பவர் மிதுனுடன் பைக்கை இரவலாக கேட்டுள்ளார்.
புதிதாக எடுத்த பைக்கை கொடுக்க முடியாது என மிதுன் மறுத்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த வைசாக், செல்போன் கடைக்குள் வைத்து மிதுனை சரமரியாக தாக்கியுள்ளார்.
வலி தாங்க முடியாமல் மிதுன் கதறி கதறி அழுதுள்ளார். மிதுன் ஒரு ஹீமோபிலியா நோயாளி. அதாவது சிறு காயம் ஏற்பட்டாலும் அதிலிருந்து தொடர்ந்து ரத்தம் வரும். அது தெரிந்தும் வைசாக் அவரை கொடூரமாக தாக்கியுள்ளார்.
இதில் காயமடைந்த மிதுன் தற்போது வரையிலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தாக்குதல் நடத்திய அடுத்த நாளே திருச்சூர் போலீசார் வைசாக்கை கைது செய்தனர்.
விசாரணையில் இவர் மீது வேறு பல வழக்குகளும் உள்ளது தெரியவந்தது. அந்த கடையின் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in