பாலாஜி பிறந்தநாளில் அம்மா உடன் பங்கேற்ற ஷிவானி

பிக்பாஸ் சீசன் 4-ல் ஷிவானி நாரயணனுக்கும், பாலாஜி முருகதாஸுக்கும் இடையே ஆரம்பத்தில் லவ் ட்ராக் ஆரம்பமானது. ஆனால், அதற்குள் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த ஷிவானியின் அம்மா, ஷிவானியை கண்டித்தார். அதன்பின் அந்த விவகாரம் குறித்து பெரிதாக பேசப்படவில்லை. ஆனால், பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பிறகு ஷிவானியும், பாலாஜியும் தங்களது நட்பை வளர்த்தனர். ஒருகட்டத்தில் ஷிவானியின் தாயாரும் பாலாஜியை புரிந்துகொள்ள மூவரும் அடிக்கடி சந்தித்து நட்பை வளர்ந்து கொண்டனர். ஒன்றாக சேர்ந்து செல்பி புகைப்படங்கள் எடுத்து அவ்வப்போது வெளியிட்டு வந்தனர்.

இந்நிலையில், பாலாஜி முருகதாஸின் பர்த்டே பார்ட்டி அண்மையில் நடைபெற்றுள்ளது. அதில், ஷிவானியுடன் அவரது தயாரும் கலந்து கொண்டுள்ளார். இந்த புகைப்படமானது வைரலாகி வரும் நிலையில் 'மருமனுடன் செல்பியா' என ஷிவானியின் அம்மாவை ஜாலியாக கேலி செய்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.