உலகக்கோப்பையில் காலியுறுத்திக்கு நுழைந்துவிட்டோம்! வெற்றியை கொண்டாடும் பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான்


பிரான்ஸ் அணி கத்தார் உலகக்கோப்பையில் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியதை கொண்டாடும் வகையில் அந்நாட்டு ஜனாதிபதி ட்வீட் செய்துள்ளார்.

வெற்றி குறித்து பிரான்ஸ் ஜனாதிபதியின் பதிவு  

கத்தாரில் நடந்து வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் சூப்பர் 16 சுற்றில் பிரான்ஸ் மற்றும் போலந்து நேற்று மோதின.

தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பிரான்ஸ் அணி இந்தப் போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் போலந்தை வீழ்த்தியது.

உலகக்கோப்பையில் காலியுறுத்திக்கு நுழைந்துவிட்டோம்! வெற்றியை கொண்டாடும் பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் | Macron Tweet About France In Quater Final Qatar

இதன்மூலம் காலிறுதி சுற்றுக்கு முன்னேறிய பிரான்ஸ், வரும் 11ஆம் திகதி நடக்கும் போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

போலந்துக்கு எதிரான போட்டியில் இரண்டு கோல்கள் அடித்து அணியை வெற்றி பெற வைத்த பெப்பே, இந்த உலகக்கோப்பை அதிக கோல்கள் (5) அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

இந்த நிலையில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தனது ட்விட்டர் பக்கத்தில் பெப்பேயின் புகைப்படத்தை பதிவிட்டு, காலியிறுதிக்கு முன்னேறிவிட்டோம் என குறிப்பிட்டுள்ளார்.  

இமானுவல் மேக்ரான்/Emmanuel Macron

@AP Photo/Achmad Ibrahim, Pool



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.