விருதுநகர் சந்தையில் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைப்பட்டியல் வாரம் தோறும் வெளியிடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த வாரத்திற்கான விலைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், நல்லெண்ணெய் மற்றும் பாமாயில் விலை உயர்ந்துள்ளது.
அதன்படி, கடந்த வாரம் 15 கிலோ எடை கொண்ட நல்லெண்ணெய் டின் 5610 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், இந்த வாரம் 165 ரூபாய் உயர்ந்து டின் ஒன்று 5775 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், பாமாயில் விலையும் கடந்த வாரத்தை விட இந்த வாரம் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் 15 கிலோ எடைகொண்ட பாமாயில் டின் 1530 ரூபாய் என்ற அளவில் விற்கப்பட்டது. இந்த வாரம் அது 40 ரூபாய் உயர்த்தப்பட்டு, 1570 ரூபாய் என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த விலை உயர்வு இல்லத்தரசிகள் மற்றும் வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.