1. நேற்று, நாக் அவுட் சுற்றில் பிரான்ஸ் அணியும் போலந்து அணியும் அல் துமாமா மைதானத்தில் மோதின. இந்த ஆட்டத்தில், பிரான்ஸ் அணி அதிரடியாக விளையாடியது. பிரான்ஸ் அணி வீரர் ஒலிவியே ஜிரூ 44 ஆவது ஆட்டத்தின் முதல் கோலை அடித்தார். பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் எம்பாப்பே 74 ஆவது நிமிடத்திலும், 91 ஆவது நிமிடத்திலும் கோலடித்து அசத்தினார். ஆட்டத்தின் முடிவில் 3-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்றது. ஒலிவியே ஜிரூ தனது 52 வது கோலை அடித்ததன் மூலம் பிரான்ஸ் அணிக்காக அதிக கோல்களை அடித்த நபர் என்ற பெருமையை பெற்றார்.

2. உலகக்கோப்பை குரூப் பிரிவின் முதல் ஆட்டத்தில் பிரேசில் அணி, செர்பியா அணியை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின்போது, பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மருக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது. சிகிச்சை மேற்கொண்டு வரும் நெய்மர், “பயிற்சியின்போது நன்றாக விளையாடினால் தென்கொரியா அணிக்கு எதிரான நாக் அவுட் போட்டியில் விளையாடுவார்.” என பிரேசில் அணியின் பயிற்சியாளர் டைட் கூறியுள்ளார்.
3. நேற்று, நாக் அவுட் போட்டியில் போலந்து அணிக்கு எதிராக பிரான்ஸ் அணியின் வீரர் எம்பாப்பே அதிரடியாக விளையாடி 2 கோல்கள் அடித்தார். உலகக்கோப்பை தொடர்களில் மொத்தம் 23 போட்டிகளில் விளையாடிய மெஸ்ஸி, 9 கோல்கள் அடித்துள்ளார். அதே சமயம், உலகக் கோப்பையில் மொத்தமாக 20 போட்டிகளில் விளையாடிய ரொனால்டோ, 8 கோல்கள் அடித்துள்ளார். ஆனால், 23 வயதான பிரான்ஸ் அணி வீரர் எம்பாப்பே, உலகக்கோப்பை தொடரில் மொத்தமாக 11 போட்டிகளில் விளையாடி, 9 கோல்களை அடித்து சாதனை படைத்துள்ளார்.
4. போலந்து அணிக்கு எதிராக கிலியன் எம்பாப்பே சிறப்பாக ஆடியிருந்தார். இந்தப் போட்டியின் முக்கியமான கட்டத்தில் எம்பாப்பே 35 கி.மீ வேகத்தில் ஓடியிருந்தார். கடந்த 16 போட்டிகளில் களத்திற்குள் அவர் இவ்வளவு வேகமாக ஓடியதே இல்லை.

5. ஆஸ்திரேலிய அணி ரவுண்ட் ஆப் 16 வரை முன்னேறியிருந்தது. அதில் அர்ஜென்டினாவிடம் தோற்றிருந்ததது. ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் கிரஹாம் அர்னால்ட், ‘இனியாவது ஆஸ்திரேலிய அரசாங்கம் காலப்ந்த்தை ஊக்குவிக்க பணம் செலவளிக்க வேண்டும்’ என கோரிக்கை வைத்துள்ளார்.