இன்றைக்கு ஆஜராக முடியாது சிபிஐ விசாரணையை வேறு தேதிக்கு மாத்துங்க: கேசிஆர் மகள் கவிதா கடிதம்

ஐதராபாத்: டெல்லி மதுபான ஊழல் வழக்கில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கே.கவிதாவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பி இருந்தது. இதன்படி, கவிதாவின் ஐதராபாத் இல்லத்தில் இன்று விசாரணை நடத்தப்பட இருந்தது. இந்நிலையில், சிபிஐக்கு கவிதா தரப்பில் நேற்று அனுப்பப்பட்ட கடிதத்தில், ‘இந்த வழக்கு தொடர்பாக எப்ஐஆர் நகல் மற்றும் புகாரையும் கவனமாக பார்த்ததில், எனது பெயர் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்பதை தெரிந்து கொண்டேன். அதே சமயம், ஏற்கனவே திட்டமிட்ட சில பணிகள் இருப்பதால் டிச.6ம் தேதி விசாரணையில் என்னால் ஆஜராக முடியாது. அதற்கு பதிலாக வரும் 11, 12, 14 அல்லது 15ம் தேதிகளில் ஐதராபாத்தில் உள்ள எனது இல்லத்தில் உங்களை சந்திக்க முடியும்’ என கூறி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.