பயங்கரவாதிகளின் ஹிட் லிஸ்ட் அச்சத்தில் காஷ்மீரி பண்டிட்கள்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

ஜம்மு: பயங்கரவாதிகள் புதிதாக ‘ஹிட் லிஸ்ட்’ வெளியிட்டுள்ளதைத் தொடர்ந்து, காஷ்மீர் பள்ளத்தாக்கில் பணியாற்றும் காஷ்மீரி பண்டிட்கள் அச்சத்தில் உள்ளனர்.

பிரதமர் மறுவாழ்வு திட்டத்தின் கீழ், காஷ்மீரி பண்டிட்கள், ஜம்மு – காஷ்மீரில் பல இடங்களில் அரசுப் பணியில் அமர்த்தப்பட்டனர்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக காஷ்மீரி பண்டிட்களை குறிவைத்து, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து, காஷ்மீர் பள்ளத்தாக்கில் அரசு அலுவலகங்களில் பணியாற்றும் காஷ்மீரி பண்டிட்கள் அச்சமடைந்தனர். தங்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றும்படி அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

latest tamil news

இதை வலியுறுத்தி, ஜம்முவில் உள்ள மறுவாழ்வு கமிஷனர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டம், ௨௦௦ நாட்களைத் தாண்டியுள்ளது. இந்நிலையில், லஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாத அமைப்பின் துணை அமைப்பு ஒன்று சமீபத்தில் ஒரு பட்டியலை வெளியிட்டது.

இதில், காஷ்மீரில் பணியாற்றும் அரசு ஊழியர்களான, ௫௬ காஷ்மீரி பண்டிட்கள் பெயர் இடம் பெற்றுள்ளன. இவர்களை கொல்லப் போவதாக அந்த அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.

இதையடுத்து, காஷ்மீரி பண்டிட்களின் அச்சம் அதிகரித்துள்ளது. உடனடியாக தங்களை வேறு இடங்களுக்கு மாற்றும்படி போராட்டத்தை தீவிரப்படுத்திஉள்ளனர்.

அரசுப் பணியில் உள்ள காஷ்மீரி பண்டிட்கள் குறித்த பட்டியல் பயங்கரவாதிகளுக்கு எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடத்தவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.