உடலின் ராஜ உறுப்பு கல்லீரல்! அதை காக்கும் இயற்கை உணவுகள் இவைதான்


நமது உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்புகளும் முக்கியமானது தான்.. அதிலும் மிக முக்கியான உறுப்புகள் என்று பார்த்தால் அது கல்லீரல்.!

நொதிகளை செயல்படுத்துவது, இரத்தத்தின் அழுக்கை நீக்குவது, உடலில் இருந்து நச்சுகளை அகற்றுவது என நமது உடலில் பல இன்றியமையாத வேலைகளை செய்துவருகிறது கல்லீரல்.

கல்லீரலை காத்து பாதுகாப்பாக வைத்து கொள்ள சில உணவுகள் இருக்கின்றன.

பீட்ரூட்

பீட்ரூட்டை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. பீட்ரூட் கல்லீரல் மற்றும் இரத்தம் இரண்டையும் சுத்தம் செய்து கல்லீரலை அரணாக காக்கிறது.

உடலின் ராஜ உறுப்பு கல்லீரல்! அதை காக்கும் இயற்கை உணவுகள் இவைதான் | Liver Safe Foods Health

Shutterstock

வெங்காயம்

வெங்காயமும் நமது கல்லீரலை பாதுகாக்கும் முக்கிய உணவாக கருதப்படுகிறது. வெங்காயத்தில் இருக்கும் அதிகப்படியான கந்தகம், பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு ஆகிய பண்புகள் நமது கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மையை போக்கி ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

மஞ்சள்

கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த மஞ்சள் சிறந்த மூலிகை. மஞ்சள் அதிகப்படியான நச்சுக்களை அகற்றுவதில் சிறந்தது. ஆல்கஹால் அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் கல்லீரல் பாதிப்பை நிர்வகிக்க உதவுகிறது. செரிமானத்தையும் மேம்படுத்துகிறது.
மஞ்சளில் உள்ள குர்குமின் அழற்சி மருந்துகள் குறிவைக்கும் COX2 என்சைம்களை தடுக்கிறது. கல்லீரலை பாதுகாக்கிறது.

நிலவேம்பு

இது கல்லீரல் நோய்கள், மஞ்சள் காமாலை, ஹெபடைடிஸ் போன்றவற்றையும் குணப்படுத்துகிறது. 

பூண்டு

பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட பூண்டில் செலினியம் என்ற கனிமம் காணப்படுகிறது. இது கல்லீரலை சுத்தப்படுத்தவும் கல்லீரல் நொதிகள் மற்றும் நச்சுகளை அகற்றவும் உதவுகிறது. 

உடலின் ராஜ உறுப்பு கல்லீரல்! அதை காக்கும் இயற்கை உணவுகள் இவைதான் | Liver Safe Foods Health

IURII BUKHTA



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.