கடலூர் மாவட்டம் துறையூரில் இரண்டு கிராமங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதால் அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
துறையூர் கிராமத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் அருகில் திட்டக்குடி, விருத்தாசலம் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை துறையூர் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக மாணவர்கள் காத்திருந்தனர்.
அப்போது இருவேரு சமூகத்தை சேர்ந்த இரு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து நேற்று இரவு இரு மாணவர்களின் உறவினர்களிடையே மோதல் வெடித்தது.
ஒருவருக்கொருவர் கல் வீசியதுடன், உருட்டுக் கட்டையால் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து இரு தரப்பினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மோதலில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்தனர். இதில் விருத்தாசலம் ஆய்வாளர் முருகேசன் உட்பட நான்கு போலீசாருக்கு காயம் ஏற்பட்டது.
இந்த மோதலில் காயமடைந்த 14 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் துறையூரில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
newstm.in