அன்று ஜோஷ் கிரியேட்டர்… இன்று இணையத்தை கலக்கும் குட்டிப் பாடகி!!

அருவி திரைப்படம் நினைவிருக்கிறா? அந்தப்படத்தில் சிறுவயது அருவியாக நடித்த குழந்தைதான் ப்ரணதி. இவர் இப்போது சமூக வலைதளங்களின் சென்சேஷன். தனது மந்திரக்குரலால் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார்.

13 வயதாகும் ப்ரணதி பன்முகத்திறமை கொண்டவர். மியூசிக் ஆல்பம், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சிகளில் இவர் பாடி வருகிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் கே.எம். மியூசிக் பள்ளியின் மாணவி இவர்.

2012 முதல் 2014 வரை வெஸ்டர்ன் பாடல்கள் பாட பயிற்சி பெற்றார். 2016ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் உடன் ப்ரணதி தொடரி படத்தில் இடம்பெற்றுள்ள “போன உசுரு”, அனேகன் படத்தில் உள்ள “டங்காமாரி” ஆகிய பாடல்களை மேடையில் பாடி அசத்தினார்.

அப்போதில் இருந்து தனுஷ், ப்ரணதியின் ரசிகராக மாறினார். தனுஷ் தனது சமூக வலைதள பக்கங்களில் ப்ரணதியின் வீடியோக்களை பகிர்ந்துள்ளார். அவர் பாடிய பல பாடல்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

குறிப்பாக ஷேப் ஆஃப் யு மற்றும் ஆத்தங்கர ஓரத்தில் நின்னாலே மேஷ் அப் வெற லெவல் ரகம். ப்ரணதி தமிழ் சினிமாவில் சரவணன் இருக்க பயமேன் படம் மூலம் அறிமுகமானார்.

டி.இமான் இசையில் லங்கு லங்கு லபகரு என்ற பாடல் சினிமாவில் இவரது முதல் பாடல். தெலங்கில் சாம் சிஎஸ் இசையில் லக்ஷ்மி படத்தில் இடம் பெற்றிருந்த பப்பரபப்பா என்ற பாடலை பாடியிருந்தார்.

பாடல் மட்டுமில்லாமல் நடிப்பிலும் அசத்தியிருக்கிறார் இவர். அருவி படத்தில் சிறுவயது அருவியாக நடித்தவர் இவர்தான். அந்தப்படத்தில் பேபி டிராக்கை பாடியவர்களின் ப்ரணதியும் ஒருவர். இவருக்கு ஆங்கிலம், தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஸ்பேனிஷ் ஆகிய மொழிகள் தெரியும்.

ப்ரணதிக்கு படங்களில் பாடுவதற்கான வாய்ப்பு தொடர்ந்து குவிந்து வருகிறது. இவர் பல்வேறு மொழிகளில் பாடி வருகிறார். அதுமட்டுமல்லாமல், மூன்று படங்களில் நடித்து வருகிறார்.

ஷாட் பூட் த்ரீ, மழை பிடிக்காத மனிதன் மற்றும் வெப் சீரிஸ் ஒன்றில் ப்ரணதி நடிக்கிறார். ஏராளமான விருதுகளுக்கு சொந்தக்காரர் இவர். சன் சிங்கர் சீசன் -4 இன் டைட்டில் வின்னர் இவர்தான்.

மலேசியாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் சிறப்பாக பாடியதற்காக டேஸ்லிங் தமிழச்சி என்ற விருது கிடைத்தது. பல டிவி சேனல்கள், முன்னணி யூடியூப் சேனல்கள் ப்ரணதியை பேட்டி கண்டுள்ளன.

சமூகவலைதளம் மூலம் ப்ரணதி ஏராளமான மக்களின் இதயங்களை வென்றுள்ளார். பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் 20 லட்சம் பின்தொடர்பவர்களை கொண்டுள்ளார். அதே போல் ஜோஷ்-இல் 51ஆயிரம் ஃபாலோவர்களை வைத்திருக்கிறார் ப்ரணதி.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.