குஜராத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு வந்த பக்தர் அங்கிருந்த யானை சிலைக்கு அடியில் சவாலான ஒன்றைச் செய்ய முயன்றார். ஆனால் அதில் அவரே சிக்கிக் கொண்டார். பின்னர் அங்கிருந்த மக்கள் வந்து அவரை காப்பாற்ற வேண்டியிருந்தது.
பிரார்த்தனைக்காக ஏதோ செய்து கொண்டிருந்த போது சிலைக்கு அடியில் சிக்கிக் கொண்டு அதிலிருந்து வெளியே வர கடுமையாக முயன்றது வீடியோவில் தெரிகிறது. ட்விட்டர் பயனாளர் நிதின் பகிர்ந்த வீடியோவில் உள்ள நபர் யானை சிலையின் கால்களுக்கு இடையில் சிக்கி, அவர் தனது கைகளையும் உடலையும் பயன்படுத்தி வெளியே வர முயற்சிக்கிறார். ஆனால் பலனில்லை.
அவருக்கு உதவ பலர் ஒன்று திரண்டு வருவதை வீடியோவில் காணலாம். பூசாரிகளும் சிலைக்கு அடியில் இருந்து நபரை வெளியே இழுக்க உதவுகிறார்கள். கோவிலுக்குச் வந்த பல பக்தர்கள் அவரைத் வெளியேறுவதற்கான ஆலோசனைகளையும் வழங்குகிறார்கள்.
அந்த பக்தர் வெளியேறுவதற்கு தன்னால் இயன்றவரை முயற்சி செய்கிறார். அவர் தனது உடலைச் சுழற்ற முயற்சிக்கிறார், மேலும் மக்கள் உதவிக்காக தங்கள் கைகளை நீட்டினர். ஆனால் அந்த நபர் சிலைக்குள் சிக்கிக் கொண்டார். அந்த நபர் சிலையிலிருந்து வெளியே வந்தாரா இல்லையா என்பது வீடியோவில் இருந்து தெளிவாகத் தெரியவில்லை.
வீடியோ பகிரப்பட்டதில் இருந்து 2 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகள் கிடைத்துள்ளன. இதே போன்று, யானை சிலையின் கால்களுக்கு இடையில் சிறிய இடைவெளியில் ஊர்ந்து சென்றதால் ஒரு பெண் பக்தரும் சிக்கிய சம்பவம் 2019-ல் நடந்தது. அவர் சிலையை விட்டு வெளியே வர முயன்று, பின்னர் பலர் அவரை காப்பாற்ற உதவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.