
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான திரைப்படம் ‘பாபா’. இந்த படத்தில் பாலிவுட் நடிகை மனிஷா கொய்ராலா கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, ரியாஸ்கான், எம்.என்.நம்பியார், ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, சங்கவி, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
அண்ணாமலை, வீரா, பாட்ஷா ஆகிய படங்களை ஹிட் கொடுத்த சுரேஷ் கிருஷ்ணா இப்படத்தை இயக்கினார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.
தற்போது இந்த படம் மீண்டும் புத்தம் புதிய பொலிவுடன் நவீன தொழில்நுட்பத்தில் டிஜிட்டல் வெர்சனில் தயாராகியுள்ளது. இதையடுத்து சமீபத்தில் இப்படத்தின் புதிய டிரெய்லர் ஒன்றும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் டிசம்பர் 10-ஆம் தேதி இப்படம் வெளியாகிறது.