நடிகர் விசுவால் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகப்படுத்தப்பட்டவர் சிவநாராயண மூர்த்தி. இவருடைய முதல் படம் பூந்தோட்டம். தமிழில் தொடங்கி கன்னடம், மலையாளம், தெலுங்கு எல்லாம் சேர்த்து 259 திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
பெரும்பாலும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலேயே நடித்துள்ள இவர், சிவாஜி, ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்களுடன்நடித்திருக்கிறார். ரஜினியுடன் படையப்பா சந்திரமுகி படத்தில் நடித்திருப்பார். வடிவேலோட 20 படங்கள், விவேக்கோட 20 படங்கள் நடிச்சிருக்கார்
விவேக், வடிவேலு காமெடிகளில் பிரபலமாக அறியப்பட்ட சிவநாராயண மூர்த்தி திடீர் உடல்நலக்குறைவால் காலமானார்.