இலவச அரசியல் எடுபடவில்லை: அமித்ஷா ஆனந்தம்…

இலவசம் வழங்கும் அரசியலை குஜராத் மக்கள் நிராகரித்து விட்டதாக பாஜக மூத்த தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

குஜராத் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்றது. இது குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், குஜராத்தில் பாரதிய ஜனதாவுக்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை அளித்த அம்மாநில மக்களுக்கு வணக்கம் தெரிவித்துக் கொள்வதாக பதிவிட்டுள்ளார்.

 பிரதமர் மோடியின் வளர்ச்சி மாதிரி மீது மக்கள் நம்பிக்கை வைத்திருப்பதை இது காட்டுவதாக அமித்ஷா பெருமிதம் அடைந்துள்ளார். கடந்த 20 ஆண்டுகளாக மோடியின் தலைமையின் கீழ், குஜராத்தில் அனைத்து வளர்ச்சி சாதனைகளையும் மக்கள் ஆசீர்வதித்து, அனைத்து வெற்றி சாதனைகளையும் முறியடித்து புதிய சாதனைக்கு வழிவகுத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த அமோக வெற்றியால், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் பாரதிய ஜனதாவுடன் இருப்பது தெளிவாகிறது என்று அமித்ஷா குறிப்பிட்டுள்ளார். இலவசம், வெற்று வாக்குறுதிகள் ஆகியவற்றை அளிக்கும் அரசியலை மக்கள் நிராகரித்து விட்டனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் நலனுக்காக பாடுபடும் மோடியின் பாரதிய ஜனதாவுக்கு முன் எப்போதும் இல்லாத வெற்றியை அளித்துள்ளனர் என்று அமித்ஷா கூறியுள்ளார். இந்த வெற்றிக்காக பாரதிய ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா, முதலமைச்சர் பூபேந்திர படேல், கட்சியின் மாநில தலைவர் சி.ஆர்.பட்டீல் ஆகியோருக்கு அமித்ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.

newstm.in


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.