
திருமணத்திற்கு முந்தைய நாள் செல்ஃபி எடுக்கும்போது ஜோடி கல்குவாரியில் தவறி விழுந்ததால் நடக்க இருந்த திருமணம் நின்றது.
கேரள மாநிலம் பரவூர் குணாவைச் சேர்ந்த வினுகிருஷ்ணன், சாண்ட்ரா ஆகிய இருவருக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது. இருவரின் திருமணம் இன்று நடைபெற இருந்தது.
இருவரும் நேற்று பல்வேறு கோவில்களுக்குச் சென்று தரிசனம் செய்தனர். பிறகு வேலமனூர் பகுதியில் உள்ள கல்குவாரிக்கு சென்றனர். அப்போது கல்குவாரி மேலே இருவரும் செல்ஃபி எடுத்தனர்.

அப்போது தவறுதலாக சாண்ட்ரா குவாரியில் விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த வினுகிருஷ்ணன் உடனே குவாரியில் குதித்து சாண்ட்ராவை மீட்டு அங்கிருந்த ஒரு பாறை மீது அமரவைத்தார்.
அந்த வழியாக வந்த இளைஞர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். பிறகு போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் வந்து இருவரையும் பத்திரமாக மீட்டனர். கல்குவாரியில் விழுந்ததால் இருவருக்கும் காயம் ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் இன்று நடக்க இருந்த திருமணம் நின்றுபோனது. வேறு தேதியில் திருமணத்தை நடத்த இருவீட்டாரும் முடிவு செய்துள்ளனர்.
newstm.in