mandous cyclone live: மாண்டஸ் கோர தாண்டவம்… சென்னை மற்றும் புறநகரில் பவர் கட்!

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு 11:30 மணி அளவில் புதுச்சேரிக்கும் , ஸ்ரீ ஹரிகோட்டாவுக்கும் இடையே மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம கணித்திருந்தது.

இந்த கணிப்பின்படியே, புயல் கரையை கடப்பதற்கான அறிகுறி இரவு 7 மணியில் இருந்தே உணரப்பட்டது. சென்னை கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலை, உள்ளிட்ட கடலை ஒட்டியுள்ள இடங்களில் பலத்த சூறை காற்றுடன் மாலை 6 மணி முதலே மழை கொட்டித் தீர்த்து வருகிறது. சென்னை மெரீனா, காசிமேடு, பெசன்ட் நகர் உள்ளிட்ட இடங்களில் கடல் வழக்கத்தை விட அதிக கொந்தளிப்புடன் காணப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஒட்டுமொத்த தமிழகமே பதற்றத்துடன் எதிர்பார்த்திருந்த மாண்டஸ் புயலின் வெளிப்பகுதி இரவு 10 மணியளவில் மாமல்லபுரம் அருகே கரையை கடக்க தொடங்கியது. அ்ப்போதைய நிிலவரப்படி, புயலின் மையப்பகுதி சென்னையில் இருந்து 90 கிலோமீட்டர் தொலைவிலும், மாமல்லபுரத்தி்ல் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

புயல் தொடர்ந்து 12 கிலோமீட்டர் வேகத்தில் கரையை நோக்கி வருவதாகவும், இதன் விளைவாக மணிக்கு 70 -780 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசி வருவதாகவும் தென்மண்டல வானிலை இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்திருந்தார்.

மின்தடை: புயல், மழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலைகள் மற்றும் அவற்றை ஒட்டியுள்ள பெரும்பாலான பகுதிகளில் இன்றிரவு 9 மணி முதல் மின்விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று வன்டலூர், அமபத்தூர், கொரட்டூர் உள்ளி்ட்ட புறநநகர் பகுதிகளிலும், சைதாப்பேட்டை உள்ளிட்ட மாநகரின் சில பகுதிகளிலும் மின்விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

மாண்டஸ் புயல் காரணமாக வீசிய சூறாவளியில், அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் பல ஆண்டுகளான பெரிய மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்ததால் அப்பகுதியி்ல் இரவு சில மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாநகராட்சி பணியாளர்களும், தீயணைப்புப் படையினரும் நீண்ட போராட்டத்துக்கு பிறகு சாய்ந்த மரத்தை அப்புறப்படுத்திய பிறகு போக்குவரத்து சீரானது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.