புதுச்சேரி: மாண்டஸ் புயலால் புதுச்சேரியில் இரண்டு கூரை வீடுகள் மீது வேரோடு சாய்ந்த புளிய மரத்தை பேரிடர் மீட்பு படையினர் ஜேசிபி இயந்திரம் மூலம் வெட்டி அகற்றினர்.
புதுச்சேரி கிருமாம்பாக்கம், பிள்ளையார் குப்பம் அங்காளம்மன் கோவில் வீதியில், செல்வராணி மற்றும் லட்சுமணன் என்பவர் கூரை வீட்டின் மீது நேற்று நள்ளிரவு வீசிய மாண்டஸ் புயல் காற்றால் வீட்டின் அருகில் இருந்த 100 வருட பழைமை வாய்ந்த புளிய மரம் வேரோடு சாய்ந்து இரண்டு கூரை வீடுகள் மீது நள்ளிரவு விழுந்தது.
இதனால் வீட்டில் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் உள்பட ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்தன.வீடு மீது விழுந்த மரத்தை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஜேசிபி இயந்திரம் துணையுடன் வெட்டி அகற்றினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement