
சென்னையில் இன்று, கொட்டிய மழையிலும் ரசிகர்கள் நடனமாடி கொண்டாட்டத்துடன் அதிகாலைக் காட்சியில் ‘பாபா’ திரைப்படத்தைக் கண்டு களித்தனர்.
கடந்த 2002-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில், அவரே கதை, திரைக்கதை எழுதி தயாரித்து வெளியிட்ட திரைப்படம் ‘பாபா’. இந்த படத்தை ‘அண்ணாமலை’, ‘வீரா’, ‘பாட்ஷா’ படத்தை தொடர்ந்து நான்காவது முறையாக சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார்.

ரஜினிக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலாவும், முக்கிய வேடங்களில் ரியாஸ் கான், கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, நம்பியார், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
‘பாபா’ திரைப்படம் திரைக்கு வந்து 20 ஆண்டுகள் ஆன நிலையில், மீண்டும் மறு படத்தொகுப்பும் நவீன தொழில்நுட்பத்திற்கேற்ப கலர் கிரேடிங் செய்யப்பட்டு படத்தை புதுப்பொழிவுடன் மேம்படுத்தி இன்று மறுவெளியீடு செய்துள்ளனர்.

இந்நிலையில், சென்னையில் இன்று கொட்டிய மழையிலும் ரசிகர்கள் நடனமாடி கொண்டாட்டத்துடன் அதிகாலைக் காட்சியில் ‘பாபா’ திரைப்படத்தைக் கண்டு களித்தனர்.