ஆயிஷா பிக்பாஸில் எலிமினேட் ஆனதற்கான 3 காரணங்கள்

பிக்பாஸ் தமிழில் கடந்த வாரம் 2 வாரங்கள் எலிமினேஷன் இருந்தது. சர்பிரைஸாக ராம் மற்றும் ஆயிஷா அடுத்தடுத்து வெளியேற்றப்பட்டனர். சிலருக்கு இந்த எலிமினேஷன் அதிர்ச்சியாக இருந்தாலும், கடந்த வாரம் டபுள் எலிமினேஷ் இருக்கும் என   பிக்பாஸ் ஏற்கனவே அறிவித்துவிட்டார். இந்நிலையில், பிக்பாஸ் டபுள் எலிமினேஷன் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. ராம் மற்றும் ஆயிஷா ஏன் வெளியேற்றப்பட்டார்கள் என தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதில், ஆயிஷா வெளியேற்றப்பட்டதற்கான 3 காரணங்களையும் சில நெட்டிசன்கள் பட்டியலிட்டுள்ளனர். 

1. ஆசீமை எதிர்த்த ஆயிஷாவுக்கு முதல் இரண்டு வாரங்கள் மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. அதே தைரியத்துடன் அவள் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டபோது, அதில் இருந்து ஆயிஷா தடம் மாறத் தொடங்கினார். இது ஆயிஷாவுக்கு எதிராக அமைந்தது.

2. பொம்மை டாஸ்கின்போது ஆயிஷா விளையாடிய விதம் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. கமல்ஹாசனும் இதனை சுட்டிக்காட்டியபோதும் ஆயிஷா அடுத்தடுத்த நாட்களில் அந்த தவறுகளை ஒப்புக் கொண்டதாக தெரியவில்லை.  

3. ஒருவழியாக தன்னுடைய தவறை ஆயிஷா ஏற்றுக் கொண்டிருந்தபோது, ரசிகர்கள் அவரை முழுவதுமாக வெறுத்திருந்தனர். அதனால், போட்டியில் இருந்து ஆயிஷா வெளியேறுவதை தவிர வேறு எந்த வழியும் அவர் முன்னால் இல்லை.

அதேநேரத்தில் கடந்த வாரமே அவர் வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டபோதும், சிறிய வித்தியாசத்தில் தப்பிப் பிழைத்தார். இணையத்தில் ஆயிஷா ரசிகர்கள் #AyeshaDeservsToStay என்ற ஆன்லைன் பிரச்சாரத்தையும் முன்னெடுத்தனர். இதனால் தலைக்குமேல் அவருக்கு தொங்கிக் கொண்டிருந்த எலிமினேஷன் கத்தி கடைசி நேரத்தில் மற்றபோட்டியாளர் பக்கம் சென்றது. இருப்பினும் டபுள் எலிமினேஷனில் மாட்டிக் கொண்டார். இரண்டு பேர் ஒரேநேரத்தில் வெளியேற்றப்பட்டிருப்பதால் விரைவில் வைல்டு கார்டு என்ட்ரி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ரச்சிதாவின் கணவர் தினேஷ், விஜே பார்வதி, ஜிபி முத்து, விஜே மகேஷ்வரி உள்ளிட்ட பெயர்கள் வைல்டு கார்டு என்டிரியில் அடிபடும் பெயர்களாக உள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.