நடிகர் விஜய், மக்கள் இயக்க நிர்வாகிகளை பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் சந்தித்தார்.
சந்திப்பில் அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 3 மாவட்டங்களின் நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர். ரசிகர் மன்ற உறுப்பினர்களிடம் பேசிய விஜய், இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
சில வழிமுறைகளை பின்பற்றுமாறும் அவர்களை அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. ரசிகர்களுடனான சந்திப்பிற்கு வந்த விஜய் கறுப்பு சட்டை மற்றும் பேண்ட் அணிந்திருந்தார்.
நவம்பர் மாதம் நாமக்கல், சேலம், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர் மன்ற உறுப்பினர்களை விஜய் சந்தித்தார். இந்த தொடர் சந்திப்புகள் தற்போது விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்த பேச்சுக்கு வித்திட்டுள்ளது.
இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகும் இப்படத்துடன் அஜித் குமாரின் துணிவு படமும் மோதுகிறது.
வாரிசுக்குப் பிறகு, தளபதி விஜய் முன்னதாக மாஸ்டர் படத்தில் பணியாற்றிய லோகேஷ் கனகராஜுடன் கைகோர்க்கிறார். அதன் படப்பிடிப்பு குறித்து ஜனவரி 2023இல் அறிவிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
newstm.in