சென்னை விருகம்பாக்கத்தில் சித்த வைத்தியர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருகம்பாக்கம், ஏரிக்கரை தெருவை சேர்ந்த கார்த்திகேயன் (50) என்பவர் சித்த வைத்தியர் ஆவார். எம்.ஜி.ஆர். நகர் முத்துமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கலியமூர்த்தி (54) என்பவர் ஆற்காடு சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலை செய்து வருகிறார்.
இவர்கள் இருவரும் 40 ஆண்டு கால நண்பர்கள். இந்த நிலையில் கார்த்திகேயன், ரூ.50 ஆயிரத்தை கலியமூர்த்தியிடம் கொடுத்து வைத்திருந்ததாக தெரிகிறது. கடந்த 9ஆம் தேதி கலியமூர்த்தி வேலை செய்யும் அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்ற கார்த்திகேயன், ரூ.50 ஆயிரம் பணத்தை கேட்டுள்ளார்.
இதில் நண்பர்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இருவரும் ஒருவரை, ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். இதில் தலையில் படுகாயமடைந்த சித்த வைத்தியர் கார்த்திகேயன், போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் கார்த்திகேயன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கலியமூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in