ஊடகங்களில் மத்திய அரசின் விளம்பரங்களுக்காக நடப்பு நிதியாண்டில் 168.8 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.
விளம்பரங்களுக்காக மத்திய அரசின் செலவினங்களைப் பற்றி மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி எம்.செல்வராஜ் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அமைச்சர் தாக்குர் அளித்த பதிலில், “மத்திய அரசின் விளம்பரங்களுக்காக நடப்பு நிதியாண்டில் அச்சு ஊடகங்களில் ரூ.91.96 கோடியும், மின்னணு ஊடகங்களில் ரூ.76.84 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.
கடந்த 2014 – 2015-ம் நிதியாண்டில் அச்சு ஊடகங்களில் ரூ.424.84 கோடி செலவிடப்பட்டது. அடுத்தடுத்து, 2015 – 2016-ம் நிதியாண்டில் ரூ.508.22 கோடியும், 2016 – 2017-ம் நிதியாண்டில் ரூ.468.53 கோடியும், 2017 – 2018-ம் நிதியாண்டில் ரூ.636.09 கோடியும், 2018 – 2019-ம் நிதியாண்டில் ரூ.429.55 கோடியும், 2019 – 2020-ம் நிதியாண்டில் ரூ.295.05 கோடியும், 2020 – 2021-ம் நிதியாண்டில் ரூ.179.04 கோடியும் செலவிடப்பட்டுள்ளன.
கடந்த 2014 – 2015-ம் நிதியாண்டில் மின்னணு ஊடங்களில் ரூ.473.67 கோடி செலவிடப்பட்டது . அடுத்தடுத்து, 2015 – 2016-ம் நிதியாண்டில் ரூ.531.60 கோடியும், 2016 – 2017-ம் நிதியாண்டில் ரூ.609.15 கோடியும், 2017 – 2018-ம் நிதியாண்டில் ரூ.468.92 கோடியும், 2018 – 2019-ம் நிதியாண்டில் ரூ.514.28 கோடியும், 2019 – 2020-ம் நிதியாண்டில் ரூ.317.11 கோடியும், 2020 – 2021-ம் நிதியாண்டில் ரூ.101.24 கோடியும் செலவிடப்பட்டுள்ளன. வெளிநாட்டு ஊடங்களில் விளம்பரங்கள் வெளியிடப்படவில்லை” என்றார்.